தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு போராத காலம் ஜியோ கால் பதித்த பின்னர், ஆரம்பித்தது. ஏர்டெல், வோடபோன், ஐடியா என தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஜியோவுடன் போட்டி போட ஆரம்பித்தன.
ஆஃபர்கள், விலைக்குறைப்பு, தள்ளுபடி என அனைத்து வகையிலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வந்தனர். அதில் இருந்து ஒரு வழியாக மீண்டும் வருவதற்குள், பயன்படுத்தப்படும் அலைக்கற்றைக்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏர்செல் என்ற நிறுவனம் இதனால் திவாலாகிப் போகவே செய்து, மூடும்படியாக ஆகிவிட்டது. அலைக்கற்றைக்கு பாரதி ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.92 ஆயிரம் கோடி செலுத்த வேண்டி இருந்தது. இதில் நிலுவைத் தொகையாக ரூ. 41 ஆயிரம் கோடி மற்றும் 1.33 லட்சம் கோடி செலுத்தப்பட வேண்டி உள்ளது.
அனைத்து தகவல் தொடர்பு நிறுவனங்களும், நிலுவைத் தொகையை, மார்ச் 16 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
வோடபோன் இந்த நிலுவைத் தொகையினை இரண்டு கட்டமாக செலுத்துவதாக அறிவித்தது, அதாவது பிப்ரவரி 17 ஆம் தேதி ரூ.2,500 கோடி செலுத்துவதாகவும், மீதமுள்ள ரூ.1,000 கோடியை பிப்ரவரி 21 ஆம் தேதி செலுத்துவதாகவும் கூறியது. ஆனால் நீதிமன்றம் முடியவே முடியாது ஒரே தவணையில் மார்ச் 16 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.