சீனாவில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை 4,00,000 க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவைத் தாண்டி இத்தாலி, பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையினை அமலுக்குக் கொண்டுவர அறிவுறுத்தியதை அடுத்து, ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு சரியான அளவில் இணைய வசதி கொடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஜியோ Work@Home என்று அழைக்கப்படுகிற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையானது தினமும் 2 ஜி.பி. டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்திலும், 2 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 64kpbs வேகத்தில் பயன்படுத்த முடியும்.
மேலும் இந்த Work@Home சேவையின் கீழ் கால் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் சலுகை போன்ற எதுவும் கூடுதலாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.