ஜியோ மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கட்டணமில்லா தொலைபேசி மற்றும் டேட்டா சேவையின 6 மாத காலத்திற்கு இலவசமாக வழங்கியது, அதன்பின்னர் வாடிக்கையாளர்களை அதிகரிக்க, மூன்று மாதங்களுக்கு சேவையின் கால அளவை நீட்டித்தது.
அதன்பின்னர் மூன்று மாதம் ஒருமுறை குறைந்த கட்டணத்தில் ரீசார்ஜ் சேவையினை வழங்கியது, தற்போது இந்தக் கட்டணங்கள் கூடுதலாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஜியோ, தற்போது கூடுதலாக கட்டணம்
விதித்தாலும் மக்கள் தொடர வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கணக்கு, அதன்படி ரீசார்ஜ் கட்டணங்கள் குறித்த மாற்றங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் இதனுடன் கூடுதலாக டேட்டா சேவையும் அதிகமாகும் என்று தெரிகிறது, விரைவில் 5 ஜி வெளியாகும் நிலையில், அத்துடன் சேர்த்து இந்தக் கட்டண வசூலும் நடைபெறும் என்று தெரிகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.