ஜியோ டிசம்பர் 6 ஆம் தேதிக்கு பின்னர் ஜியோவின் ப்ரீபெய்டு
திட்டங்களின் விலையானது உயரப் போகிறது. அதனையொட்டி விலைகள்
உயர்வதற்கு முன்னதாக, ஜியோ சில சலுகைகளுடன் கூடிய திட்டத்தினை
அறிவித்துள்ளது.
இந்த திட்டங்களை திட்டங்களுக்கான அறிவிப்பை ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டங்களை மைஜியோ ஆப் வழியாக, தேர்வு செய்துகொள்ளலாம்.
ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையானது, குறைந்தபட்சம் 45 சதவீதம் உயரும் என்று கூறப்பட்டு வருகிறது.

பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.1,776 என்ற விலையில், ஆல் இன் ஒன் திட்டம் என்று பெயரிடப்பட்ட புதிய திட்டத்தினை ஜியோ அறிவித்துள்ளது.
இதன்படி கணக்கிட்டுப் பார்த்தால், மூன்று மாதங்களுக்கு ரூ.444 என்ற விலையில் கணக்கிடப்பட்டு ஜியோ வழங்கியுள்ளது.
இந்த திட்டம் வேலிட்டியானது ஒரு வருட காலத்திற்குச் செல்லுபடியாகக் கூடியதாக உள்ளது. இந்தத்திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், மற்ற நிறுவனங்களுக்கான 4000 வாய்ஸ் கால்ஸ் நிமிடங்கள், 100 எஸ்.எம்.எஸ் போன்றவை இதில் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மொத்த வேலிடிட்டி கால அளவு 336 நாட்கள் ஆகும்.