தொலைத் தொடர்பு நிறுவனங்களில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு முதல் இடத்தில் இருப்பது ஏர்டெல் நிறுவனமாகும். ஏர்டெல் பல வருடங்களாக போராடி பெற்ற இடத்தை ஜியோ நிறுவனம் சில ஆண்டுகளுக்குள் பிடித்து விட்டது.
அதற்குக் காரணம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பல திட்டங்களை ஜியோ அறிவித்ததே ஆகும். இதனால் ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் என பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு போர்ட் அவுட் செய்ய, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க அற்புதமான பல திட்டங்களை அறிவித்து வந்தனர்.

அந்த வகையில் ஜியோ நிறுவனம் தற்போது ரூ. 2121 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. அதாவது இந்தத் திட்டமானது 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகவும், ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான எண்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்றவற்றினை வழங்குகிறது.
ஜியோ நிறுவனம் புத்தாண்டை ஒட்டி அறிமுகப்படுத்திய ரூ.2020 திட்டத்தினைப் போல, இந்தத் திட்டமும் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.