ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவையானது சமீபத்தில் துவங்கப்பட்டு, தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையானது பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற நிலையில், தற்போது ஜியோவும் ஏர்டெல் போன்று வைபை காலிங் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஜியோ நிறுவனம் வைபை காலிங் சேவையை சென்னை மற்றும் டெல்லி பகுதிகளில் தற்சமயம் முதல்கட்டமாக துவக்கியுள்ளது. அதாவது டெல்லியில் நடந்த இந்த சேவை வெற்றிகரமானதைத் தொடர்ந்து மற்ற நகரங்களில் அறிமுகமாகி உள்ளது.
ஏர்டெலில் உள்ள வைபை காலிங்க் ஆப்சனானது, ஏர்டெல் மொபைல் ஹாட்ஸ்பாட் உடன் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்தது.

ஆனால் ஜியோ வைபை காலிங் சேவையானது சற்று ஏர்டெல் நெட்வொர்க்கினை விட மேம்பட்டதாக உள்ளது, அதாவது ஜியோ நெட்வொர்க்கில் வைபை காலிங் சேவையினை பயன்படுத்த ஜியோ நெட்வொர்க்கில் இணைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, எந்தவொரு வைபையுடன் இணைந்திருந்தாலும் பயன்படுத்தலாம்.
ஜியோ வைபை சேவை மிகச் சிறப்பாக உள்ளதாக பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.