ஜியோவின் அவுட்கோயிங்க் காலுக்கான 6 பைசா கட்டணம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினைக் கொண்டதாக உள்ளது.
வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக் கொள்ள ஜியோ நிறுவனம் பல வகையான ஆஃபர்களை அறிவித்து வருகிறது, மேலும் இது தீபாவளி பண்டிகைக்காக சில சலுகைகளை அளித்துள்ளது. புதிய சலுகைகளில் கூடுதலாக ஆஃப்நெட் ஐ.யு.சி. நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.

அதாவது புதிய ஆல் இன் ஒன் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐ.யு.சி. காலிங் சேவை வழங்கப்படுகிறது. ஐ.யு.சி. காலிங் மதிப்பு ரூ. 80 ஆகும்.
தற்போது புதிய சலுகையில் ரூ. 444 விலையில் 1000 நிமிடங்களுக்கான ஐ.யு.சி. அழைப்புகளுடன் வழங்கப்படுகிறது.
தற்போது புதிய சலுகையில் ரூ. 396 விலைக்கு, 1000 நிமிடங்களுக்கான ஐ.யு.சி. அழைப்புகள் வழங்கப்படுகிறது.