ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய அளவில் நஷ்டத்தினை சந்தித்து மூடப்படக் கூடிய நிலையில் இருந்தது, அதன்பின்னர் ஜியோவாக உருவெடுத்து தகவல் தொழில்நுட்ப ரீதியாக பெரும் புரட்சியினையே செய்து விட்டது.
ஆஃபர்களை அறிவித்து மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தன் வசம் இழுத்ததோடு நம்பர் 1 நெட்வொர்க்காக உலா வந்தது.
தற்போது டிராய் விதிமுறைகளால் மீண்டும் அவுட் கோயிங்க் காலுக்கு 6 பைசா கட்டணத்தை விதித்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியினை சந்தித்து வருகிறது.
தற்போது ஆன்லைன் வரத்தகத்தில் கால் பதித்து அமேசான், பிளிப்கார்ட்க்கு ஆப்பு வைக்க ரெடியாகி உள்ளது, அதாவது ரிலையன்ஸ் மார்ட் என்ற நிறுவனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிறுவனதின் சேவை மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் இப்போதைக்கு துவங்கப்பட்டுள்ளது.
அதாவது ரிலையன்ஸ் மார்ட் மூலம் வாடிக்கையாளர்கள் மளிகை பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்க முடியும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து தரப்படும் என்று அறிவித்துள்ளது.