Information Technology

வேலிடிட்டியினை குறைத்த ஜியோ… கடுப்பில் வாடிக்கையாளர்கள்!!

தொலைத் தொடர்பு நிறுவனங்களில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு முதல் இடத்தில் இருப்பது ஏர்டெல் நிறுவனமாகும். ஏர்டெல் பல வருடங்களாக போராடி பெற்ற இடத்தை ஜியோ நிறுவனம்  சில ஆண்டுகளுக்குள் பிடித்து விட்டது.

அதற்குக் காரணம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பல திட்டங்களை ஜியோ அறிவித்ததே ஆகும்.

இதனால் ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் என பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு போர்ட் அவுட் செய்ய, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க அற்புதமான பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

வேலிடிட்டியினை குறைத்த ஜியோ… கடுப்பில் வாடிக்கையாளர்கள்!!

டிராய் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் வசூலித்த தொகையினை ஈடுகட்ட, ஒவ்வொரு நிறுவனமும் தொடர்ந்து அதன் பிளான்களில் பல வகையான மாற்றங்களை செய்து வருகிறது.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தொடர்ந்து மலிவு விலையில் புதிய திட்டங்கள் அறிவித்தல், பழைய திட்டங்களின் விலையினை அதிகரித்தல், பழைய திட்டங்களை மாற்றி அமைத்தல் என பல மாற்றங்களை செய்து வருகிறது.

தற்போது ஜியோ, ரூ.1299 ப்ரீபெய்ட் ப்ளானின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. அதாவது இந்தத் திட்டம் இதற்கு முன்னர் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இருந்தது.

இந்த ரூ.1,299 ப்ரீபெய்ட் ப்ளான் ஆனது 24 ஜிபி 4 ஜி டேட்டா, அன்லிமிடெட் ஜியோ டூ ஜியோ குரல் அழைப்பு, 12,000 ஜியோ டூ ஜியோ அல்லாத குரல் அழைப்பு நிமிடங்கள் மற்றும் 3,600 எஸ்எம்எஸ், போன்ற சேவைகளை வழங்குகிறது.

தற்போது இதன் வேலிடிட்டி 336 நாட்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜியோ வழங்கும் மற்றுமொரு இலவச வாய்ஸ் சேவை!!

TechNews Tamil

கொரோனா எதிரொலி… ஏடிஎம்-இல் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கோங்க…

TechNews Tamil

ஜியோவுக்கு போட்டியாக BSNL வழங்கிய கூடுதல் டேட்டாக்கள்!

TechNews Tamil