உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் 32,24,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையினை அமலுக்குக் கொண்டுவர அறிவுறுத்தியதை அடுத்து, ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு சரியான அளவில் இணைய வசதி கொடுக்கும் வகையில் ஜியோ நிறுவனம் Work@Home என்று அழைக்கப்படுகிற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்த சேவையானது தினமும் 2 ஜி.பி. டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்திலும், 2 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 64kpbs வேகத்தில் பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த Work@Home சேவையின் கீழ் கால் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் சலுகை போன்ற எதுவும் கூடுதலாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவினை 4 நாட்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது, அதாவது ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்கி இந்த சேவை துவங்கியுள்ளது.
இந்த இலவச டேட்டா சலுகையை பெற மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
Work@Home முறையில் வேலை பார்ப்போருக்கு நிச்சயம் இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, அதேபோல் இந்த சேவையினைப் பெறுவதற்கான தேதியானது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். அதாவது பயனர் எந்தத் தேதியில் இதைப் பயன்படுத்தத் துவங்குகிறாரோ, அந்தத் தேதியில் இருந்து 4 நாட்களுக்கு டேட்டாவானது கிடைக்கும்.