ஜியோ நிறுவனம் 6 பைசா அவுட் கோயிங்க் காலுக்கான கட்டணத்தினை நிர்ணயித்த நிலையில் வாடிக்கையாளர்கள் பலரும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்து வந்தனர்.
இதனால் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க வேண்டும் என்று கருதி, ஜியோ நிறுவனம் தற்போது பல வகையான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜியோ ரூ.200 க்கு 1000 ஜிபி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ரூ.199 என்ற விலையில் 100 ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கி வந்த ஜியோ தற்போது ரூ.199-க்கு 1000 ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது, மேலும் அன்லிமிடெட் காலிங்கும் இதனுடன் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும்.

ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது பயனுள்ள மற்றும் கவர்ச்சிகரமான திட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அறிவித்த சில மணி நேரங்களிலேயே அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய திட்டம் என்ற பெயரினைப் பெற்றுவிட்டது.