புத்தாண்டை ஒட்டி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆஃபர்களை அறிவித்துள்ளது. அந்தவகையில் ஜியோ தற்போது பல ஆஃபர்களை வழங்கியுள்ளது.
ஜியோ வாய்ஸ் கால்ஸ் மட்டும் இலவசம், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் என்று ஜியோ அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது.
தற்போது ஜியோ நிறுவனம் புதிய திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. அதாவது ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய சலுகைகளை இந்த புத்தாண்டு ஆஃபரில் பெற முடியும்.

அதாவது இந்த பழைய சலுகைகள் அனைவருக்கும் பொருந்தாது என்பதுபோல் ஒரு விதிமுறையினை விதித்துள்ளது, அதாவது ஜியோவின் பழைய சலுகைகளை அனுபவிக்காதவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும்.
அதாவது ரூ.2020 என்ற கட்டணத்திற்கு 12 மாத சேவை கிடைக்கும் என்று தெரிகிறது. அதாவது அனைத்து மொபைல்களுக்கும் இலவச கால், தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 இலவச மெசேஜ்கள் போன்றவை இதில் கிடைக்கப்பெறும்.
ரூ.2020 க்கு ஜியோ போனை வாங்கி, ஒரு வருடத்திற்கான சலுகையினை பெறவும் செய்யலாம்.