ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை வாரி வாரி இறைத்து வருகின்றது, அந்த வகையில் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு நம்ப முடியாத பல ஆஃபர்களை அறிவித்துள்ளது.
அதாவது ஏற்கனவே உள்ள பிளானில் உள்ள அதன் டேட்டாவினை இரண்டு மடங்காக மாற்றியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்ப முடியாத அளவு வரவேற்பினைப் பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது 5 ப்ரீபெய்டு திட்டங்களை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.11:
ஜியோ நிறுவனம் ரூ.11 கட்டணத்தில் ஜியோ அல்லாத எண்களுக்கு 75 நிமிடங்கள் கால் அழைப்புகள், 800 எம்பி டேட்டா, 64கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா போன்றவற்றினை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.21:
ஜியோ நிறுவனம் ரூ.21 கட்டணத்தில் ஜியோ அல்லாத எண்களுக்கு 200 நிமிடங்கள் கால் அழைப்புகள், 2ஜிபி டேட்டா, 64கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா போன்றவற்றினை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.51:
ஜியோ நிறுவனம் ரூ.51 கட்டணத்தில் ஜியோ அல்லாத எண்களுக்கு 500 நிமிடங்கள் கால் அழைப்புகள், 6ஜிபி டேட்டா, 64கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா போன்றவற்றினை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.101:
ஜியோ நிறுவனம் ரூ.101 கட்டணத்தில் ஜியோ அல்லாத எண்களுக்கு 1000 நிமிடங்கள் கால் அழைப்புகள், 12ஜிபி டேட்டா, 64கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா போன்றவற்றினை வழங்குகிறது.