Apps

100 GB டேட்டாவை வாரிக்கொடுக்கும் ஜியோ!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, Jio GigaFiber திட்டம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் fibre-to-the-home (FTTH) என்ற அதிவேக இணையத்தை சர்வ சாதாரணமாக பெற முடியும். 


கடந்த வாரம் வெளியான நிறுவனத்தின் காலாண்டு நிதி முடிவுகளின்படி, Jio GigaFiber சேவைகளின் Beta சோதனைகளானது இறுதி கட்டத்தில் உள்ளது.

Jio GigaFiber சேவையானது அதன் வணிக ரீதியான வெளியீட்டை எப்போது சந்திக்கும் என்பது பற்றிய எந்த விவரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. ஆயினும்கூட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, Home broadband, பொழுதுபோக்கு மற்றும் Smart home IoT ஆகியவைகளை உள்ளடக்கிய Jio GigaFiber சேவையானது அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

100 GB டேட்டாவை வாரிக்கொடுக்கும் ஜியோ!


விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, Jio GigaFiber சேவையானது ரூ.4,500 என்கிற Security deposit-ன் கீழ் கிடைக்குமென்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது, ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அதன் Optical network terminal  சாதனத்தின் புதிய பதிப்பைக் கொண்டு வந்ததுள்ளதாகவும், அது ரூ.2,500/- என்கிற Security deposit-ன் கீழ் கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Jio GigaFiber-ன் அணுகலானது ரூ.600/- என்கிற விலை நிர்ணயம் கொண்ட காம்போ பிளான் வழியாக கிடைக்கிறது என்பதும், தனது நிறுவன ஊழியர்களை கொண்டு Jio GigaFiber பிராட்பேண்ட், ஜியோ ஹோம் டிவி மற்றும் ஜியோ ஆப்ஸ் ஆகியவற்றை ஒரே மாத தொகுப்பின் கீழ்,ட்ரிபிள் பிளே பிளான் என்ற பெயரின்கீழ் சோதித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

வாட்ஸ்ஆப் இல் இணைகிறது புதிய அம்சம்!

TechNews Tamil

இனி இந்த போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது!!

TechNews Tamil

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Facebook Messenger டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

TechNews Tamil