Apps

வெய்ட்டிங் ரூம், அழைப்புகளை ஷெட்யூல் செய்யும் வசதி என கலக்கும் ஜியோ மீட் சேவை!!

சமீபகாலமாக ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவி வருவதால், இதன் பயன்பாட்டிற்கு பல நாடுகளும் தடை விதித்தது. இதனால் கூகுள் மீட், வாட்ஸ் ஆப் வீடியோ கான்பரன்ஷிங்க், மெசஞ்சர் வீடியோ கால் போன்ற பல செயலிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் கால் பதிக்க ஜியோ முடிவு செய்து Jio Meet என்னும் பெயரில் வீடியோ கால் சேவையினை வெளியிட்டுள்ளது.

இந்த JioMeet செயலியானது சுமார் 100 பேர் ஒரே அழைப்பில் சேர அனுமதிக்கும் நிலையில், மேலும் இதன்மூலம் இடைவிடாது 24 மணி நேரத்திற்கு உரையாட முடியும் என்பது கூடுதல் செய்தியாகும்.

வெய்டிங் ரூம், அழைப்புகளை ஷெட்யூல் செய்யும் வசதி என கலக்கும் ஜியோ மீட் சேவை!!

மேலும் பயனர்கள் அனுமதியின்றி அழைப்புகளில் பங்கேற்பதை தவிர்க்க வெய்டிங் ரூம் என்ற அம்சம் இருப்பது சிறப்பம்சமாகும்.

ஜியோமீட் செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ், மேக் ஒஎஸ் மற்றும் இணையம் என பல்வேறு தளங்களில் கிடைக்கிறது

மேலும் இதில் ஹெச்டி ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி அழைப்புகளை ஷெட்யூல் செய்யும் வசதி போன்றவையும் வழங்கப்படுகிறது.

Related posts

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்கள் கிடையாது… ஃபேஸ்புக் எடுத்த முடிவு!!

TechNews Tamil

மளிகை பொருட்கள் வாங்க ஜியோவின் கேஷ்பேக் ஆப்பர்

TechNews Tamil

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Facebook Messenger டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

TechNews Tamil