Apps

100 பேரை ஒரே அழைப்பில் சேர அனுமதிக்கும் Jio Meet!!

கூகுளின் செயலிகளில் ஒன்றான ஜூம்  செயலியானது மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதிக பயன்பாட்டினைக் கொண்டு இருந்தது, இந்த செயலி மூலம் பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.

இது சாதாரண நபர்களின் பயன்பாடாக மட்டும் அல்லாது, கார்ப்பரேட்டுகளிலும் உரையாடல்களை மேற் கொள்ள பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் மூலம் கற்பிக்க நினைப்போர் இதன்மூலமே கற்பித்து வந்தனர்.

சமீபகாலம் ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவி வருவதால், இதன் பயன்பாட்டிற்கு பல நாடுகளும் தடை விதித்தது. மேலும் தற்போதைய தேவையினைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் வீடியோ அழைப்பு பயன்பாடுகள் மீது கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.

100 பேரை ஒரே அழைப்பில் சேர அனுமதிக்கும்  Jio Meet!!

இதனால் கூகுள் மீட், வாட்ஸ் ஆப் வீடியோ கான்பரன்ஷிங்க், மெசஞ்சர் வீடியோ கால் போன்ற பல செயலிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது, இந்த நிலையில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் கால் பதிக்க ஜியோ முடிவு செய்துள்ளது.

மேலும் இதுகுறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பினை நேற்று முன் தினம் ஜியோ வெளியிட்டுள்ளது.  Jio Meet என்னும் பெயரில் வெளிவரவுள்ள இந்த செயலி நிச்சயம் சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த JioMeet செயலியானது சுமார் 100 பேர் ஒரே அழைப்பில் சேர அனுமதிக்கும் என்பது கூடுதல் செய்தியாகும்.  மெசஞ்சர் ரூம்ஸ் 50 பேரை அனுமதிக்க உள்ள நிலையில் ஜியோ மீட் வேறு லெவல் என்றே கூறப்படுகின்றது.

Related posts

பயனர்களின் தகவலை வெளியிட்ட ட்விட்டர்!!

TechNews Tamil

டாட்டா ஸ்கையில் அதிரடிக்கும் அசத்தலான ஆஃபர்கள்!

TechNews Tamil

அடுத்த அப்டேட்டில் தொழில்நுட்ப குறைபாடுகள் சரியாகும்.. சிக்னல் செயலி அறிவிப்பு!!

TechNews Tamil