Apps

ஜியோ—வாட்ஸ் ஆப் கூட்டமைப்பில் இந்தியாவில் ஜியோ மார்ட் சேவை துவக்கம்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளமான பேஸ்புக் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கை பேஸ்புக் வாங்குவதாக கடந்த சில மாதங்கள் தகவல் வெளியாகின.

அதன்படி தற்போது, பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்கை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் அறிவித்தது. அதாவது ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்கின் விலை சுமார் 43,574 கோடி ரூபாய் ஆகும்.

பேஸ்புக், இந்தியாவில் தங்கள் வணிகத்தினைத் துவக்கும் பொருட்டே ஜியோவுடன் இணைந்ததாகக் கூறியது. அதன்படி போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனமும் ஜியோவுடன் கூட்டு சேர்த்து, ஜியோவின் ஆன்லைன் ஜியோமார்ட் சேவையைத் துவங்கியுள்ளது.

ஜியோ—வாட்ஸ் ஆப் கூட்டமைப்பில் இந்தியாவில் ஜியோ மார்ட் சேவை துவக்கம்!!

அதாவது ஜியோ மூலம் மளிகை கடைகளின் மூலம் வாட்ஸ்அப் வழியாகப் பயனர்களுக்கு உணவுப் பொருட்களை டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளது.

தற்போது, முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த சேவையானது துவங்கப்பட்டுள்ளது. அதாவது முதல் கட்டமாக ஜியோமார்ட் சேவை மும்பை பகுதியில் துவங்கப்பட்டுள்ளது,

மும்பையில் நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் புறநகர் போன்ற பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர் மூலம் சேவையானது துவக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் இந்த சேவையானது பிற மாநிலங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மும்பையில் இந்த சேவையானது சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று கருதப்படுகின்றது.

Related posts

பப்ஜி விளையாடி உயிர் இழந்த 16 வயது சிறுவன்!!

TechNews Tamil

கூகுள் பிளே ஸ்டோரில் அதிக அளவில் மால்வேர் ஆப்ஸ்கள்!

TechNews Tamil

இந்தியாவில் டிரோன் டெலிவரி சோதனையில் ஜொமாட்டோ, ஸ்விக்கி!!

TechNews Tamil