ஜியோ நிறுவனமானது, மற்ற நெட்வொர்க்குகள் அதன் கட்டணங்களை குறைத்து மலிவு விலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் தனது பிளான் ஒன்றை திருத்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, 98 ரூபாய்க்கு வழங்கப்படும் ப்ரீபெய்ட் திட்டத்தை திருத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் ஜியோ கால்கள் மற்றும் லேண்ட்லைன் கால்கள் கிடைக்கும்.
இந்த புதிய திட்டம் குறித்த அறிவிப்பானது Jio.com என்ற தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 200 எஸ்எம்எஸ்களை முன்பைவிட கூடுதலாக வழங்குகிறது, அதாவது 300 எஸ்எம்எஸ் செய்திகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் முன்பு 100 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்கியது.
மற்ற நெட்வொர்க்குகளுக்கு கால் அழைப்புகளைப் பெற, IUC டாப்-அப் வவுச்சரைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஜியோவின் இந்த பிளானது வாடிக்கையாளர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.