Information Technology

ரூ.399 க்கு ஜியோ லைட் போனை அறிமுகப்படுத்தவுள்ள ஜியோ நிறுவனம்!!

வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக் கொள்ள ஜியோ நிறுவனம் பல வகையான ஆஃபர்களை அறிவித்து வருகிறது, மேலும் பொங்கல் பண்டிகைக்காக சில சலுகைகளை அறிவித்து இருந்தது.

தற்போது ஜியோ நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் குறித்த ஒரு அப்டேட் கிடைத்துள்ளது, அதாவது ஜியோ போன் போன்று மலிவு விலையில் ஜியோ லைட் போன் என்ற கீ பேர்ட் போனை ஜியோ அறிமுகப்படுத்த திட்டம் கொண்டுள்ளது.

ஜியோ போன் 2.4 இஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டது. மேலும் இது, 1.2GHz dual-core processor கொண்டு இயங்குகிறது.

ரூ.399 க்கு ஜியோ லைட் போனை அறிமுகப்படுத்தவுள்ள ஜியோ நிறுவனம்!!

இது 4GB உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும்  இது Wi-Fi இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. 2,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

ஜியோ போன் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டதுடன், அது மாதம் முழுதும் பேசிக் கொள்ள 49 ரூபாய் என்ற அற்புதமான பிளானைக் கொண்டுள்ளது.

அதேபொல் ஜியோ லைட்டின் மாத ரீசார்ஜ் ரூ.50 என்று நிர்ணயித்து ஜியோ லைட் போனை 399 ரூபாய்க்கு விற்கத் திட்டமிட்டுள்ளது, மேலும் இதில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சில கூடுதல் சலுகைகளுடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Related posts

விளம்பரங்களைத் தடை செய்த கூகுள் க்ரோம்!

TechNews Tamil

ஜியோ அறிமுகப்படுத்திய 98 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டம்!!

TechNews Tamil

செல்போன்களில் அழைப்பு ஒலி இனி 30 வினாடிகள் மட்டுமே!!!

TechNews Tamil