Mobile

ஜியோ அறிமுகப்படுத்தும் ஃபீச்சர் போன்!!

Reliance Jio நிறுவனம் அதன் மலிவு விலையிலான Feature Phone ஒன்றை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, கூறப்படும் புதிய Feature Phone ஆனது Jio Phone 2-வின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான Jio Phone 3 ஆக இருக்கலாம். 

இந்த போனின் சரியான வெளியீட்டு தேதி அல்லது கிடைக்கக்கூடிய விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும் கூட, வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 வது ஆண்டு பொது கூட்டத்தில் ஜியோ போன் 3அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜியோ அறிமுகப்படுத்தும் ஃபீச்சர் போன்!!

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, வரவிருக்கும் ஜியோ போன் 3 ஆனது 4ஜி ஆதரவை கொண்ட Feature Phone ஆக களமிறங்கும் என்பதும், அது MediaTek SoC ப்ராசஸரை கொண்டு இயங்கும். 


முன்னர் வெளியான லீக்ஸ் தகவல்களின் படி, ஜியோ போன் 3 ஆனது 5 இன்ச் அளவிலான Touch Screen டிஸ்பிளே உடனான QWERTY Keypad-ஐ கொண்டிருக்கும். 2 ஜிபி ரேம் அளவிலான ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கும். 


கேமராத்துறையை பொறுத்தவரை, ஜியோ போன் 3 ஆனது அதன் பின்புற பேனலில் 5MP அளவிலான கேமராவையும், முன்பக்கத்தில் 2MP அளவிலான செல்பீ கேமராவும் இடம்பெறலாம் என்று ஊகிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரூ.4,500/- என்கிற புள்ளியை எட்டலாம். 

Related posts

ரூ.36,990 விலையில் விற்பனைக்குக் கிடைத்துள்ள iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது 5G மீடியாடெக் செயலியுடன் Oppo A72 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியானது சியோமி நிறுவனத்தின் சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil