Apps

காஷ்மீருக்குள் கால் பதிக்கும் ஜியோ

ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு இறுதி மாநாடு நேற்று மும்பையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி இன்ப அதிர்ச்சியை அளிக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் ஏர்டெல், வோடபோன் சேவைகளுக்கு நெஞ்சு வலியை வரவைக்கும்படியாக இருந்தது.

முக்கியமான அறிவிப்பாக ஜியோ ஃபைபர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம் நடைமுறைக்கு வரும் என்றார்.  ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10000 ரூபாய் வரை சந்தாத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்குள் கால் பதிக்கும் ஜியோ

அதேபோல் ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV & செட் டாப் பாக்ஸ் இலவசம் என்று கூறினார். இது மற்ற நெட்வொர்க்குகளுக்கு சற்று சவாலாகவே இருந்தது.

இதனை அடுத்து இவர் கூறியது ஜம்மு காஷ்மீரில் கால் ஊன்றவுள்ளதாக அவர் அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை காஷ்மீரில் காலுன்ற வைக்க நினைக்கும்போது ஜியோ முதலாவது ஆளாக இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இனி காஷ்மீரிலும் ஜியோவின் டன் டனா டன் தான் டிங்க் டோன் தான் பாருங்க என்கின்றனர் நெட்டிசன்கள்…

Related posts

வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வசதி அறிமுகம்!!

TechNews Tamil

விற்பனையில் முன்னணியில் இருக்கும் மொபைல் ஆப்ஸ் ….

TechNews Tamil

வெளியானது TikTok நிறுவனத்தின் Smartisan Jianguo Pro 3 aka Nut Pro 3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil