ஜியோ, வோடபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் அதன் சேவைக் கட்டணங்களை 40 முதல் 42 சதவீதம் வரையில் அதிகரிக்கச் செய்தனர்.
தற்போது வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு நெட்வொர்க்கும் அதன் பிளான்களை திருத்தி அமைத்துள்ளது.
அந்தவகையில், ஜியோ அதன் குறைந்தபட்ச சலுகையான ரூ. 49 என்ற திட்டத்தினை ரூ. 75 என்ற விலை அளவிற்கு உயர்த்தியுள்ளது.

இந்த ரூ. 75 சலுகையினைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா அத்துடன் தினமும் 100 எம்பி அதிவேக டேட்டா, 50 எஸ்.எம்.எஸ். போன்றவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்ய 500 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
45 ரூபாய் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றமானது வாடிக்கையாளர் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.