Information Technology

வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். வழங்கும் சேவை!!

வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு கால் செய்யும்போது வழக்கமான காலர் டியூன் கடந்த 3 நாட்களாக கேட்பதில்லை, மாறாக இருமல் சத்தம்தான் கேட்கிறது. அந்த இருமல் சத்தத்தினைத் தொடர்ந்து கொரோனா குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் குறுந்தகவலாக ஒலிபரப்பாகிறது.

அதாவது பி.எஸ்.என்.எல். மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சாரமானது கால் செய்யும்போது கேட்கிறது, வோடபோன் மற்றும் ஐடியாவில் கேட்பது இல்லை.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல ஆயிரம் பேர்களை பழி வாங்கியுள்ளது, மேலும் பல்லாயிரக் கணக்கானோர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். வழங்கும் சேவை!!

இதனால் உலக நாடுகள் பல வகையான முறைகளில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய சுகாதார துறை சார்பில் மொபைல்களில் கால்கள் செய்யும் போது விழிப்புணர்வுப் பிரச்சாரம் குறுந்தகவலாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தற்போது இந்திய சுகாதாரத் துறையின் முயற்சியாக பி.எஸ்.என்.எல். மற்றும் ஜியோ நிறுவனங்கள் புதிய விழிப்புணர்வு பிரசார குறுந்தகவலை செயல்படுத்தத் துவங்கிவிட்டன.

இதனைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன்  மற்றும் ஐடியா நெட்வொர்க்கிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Related posts

49 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி.. களம் இறங்கிய மைக்ரோசாப்ட்!!

TechNews Tamil

கூடுதல் கட்டணமில்லாமல் பே சர்வீஸ் சேனலை வழங்கத் திட்டமிட்டுள்ள டிஷ் டிவி!!

TechNews Tamil

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திரயான் 2

TechNews Tamil