ஃபிட்னஸ் Band, என்பது உடற்பயிற்சி செய்வோர் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறது. பலர் தங்கள் செய்யும் உடற்பயிற்சியின் அளவை தெரிந்து கொள்ளவும், அன்றாடம் தாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதை கணக்கிடவும் ஃபிட்னஸ் Band-ஐ பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.
இந்த iVoomi நிறுவனத்தின் Band விலை 1,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று கையைச் சுற்றிக் கட்ட பயன்படும் ஸ்டராப்.

மற்றொன்று இந்த Band செயல்படத் தேவையான அனைத்து உணரிகளையும் கொண்டுள்ள உடல் அமைப்பு. இதில் ஒரு யு.எஸ்.பி போர்ட் சார்ஜிங்கிற்காக கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே டிவைஸின் பின்புறம் மிகப் பாதுகாப்பாக பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த டிவைஸ், நீரினாலும் அதிர்வுகளாலும் பாதிக்கப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதய துடிப்பை அளக்கும் பட்டன் இருப்பதைப் பார்க்க முடியும். டிஸ்ப்ளே-வை ஆன் செய்யாத போது, நேரம், தேதி, பேட்டரி அளவு, ப்ளூடூத் ஸ்டேடஸ் போன்றவற்றை காட்டும்.
கையில் பொருத்தி ஆன் செய்துவிட்டால், டிஸ்ப்ளேவில் நடக்கும் அடிகள், எரிக்கப்பட்ட கலோரிகள், பயணப்பட்ட தூரம், தற்போதைய இதயத் துடிப்பு, காற்றுத் தன்மை அளவிட்டு குறியீடு இன்டெக்ஸ் மற்றும் வெப்பநிலை ஆகியவையைக் காட்டும்.
பேட்டரி முழு அளவில சார்ஜ் செய்துவிட்டு பயன்படுத்தினால், மூன்று முதல் நான்கு நாட்களுக்கு வருகிறது. மேலும், ட்விட்டர், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற ஆப்களின் செயல்பாடுகளை இந்த FitMe Band மூலம் பின்பற்ற முடியும்.