மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஐடெல் நிறுவனம் ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் ஆதரவு, 720×1,600 பிக்சல்கள் ஆதரவு, 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு ஆதரவு, 90 சதவீதம் டிஸ்ப்ளே டூ பாடி விகிதம் கொண்டுள்ளது.

மேலும் இது யுனிசோக் எஸ்சி9863 செயலி மூலம் இயங்குவதாக உள்ளது. மேலும் மெமரி அளவாக 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
கேமராவாக 8 மெகாபிக்சல் பிரதான கேமரா, விஜிஏ சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.
ஐடெல் விஷன் 2 எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 24 நாட்கள் பேட்டரி ஆயுள் மற்றும் 25 மணி டாக் டைம் ஆயுள் கொண்டுள்ளது.
மேலும் இரட்டை சிம் கார்ட் ஆதரவு, ஜி சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் கொண்டதாக உள்ளது.