Mobile

விரைவில் இந்தியாவில் களம் இறங்கவுள்ள ஐடெல் விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் விஷன் நிறுவனம் அதன் ஐடெல் விஷன் 1 புரோ ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விஷன் 1 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஐடெல் விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் HD பிளஸ் வாட்டர் ட்ராப் நாட்ச் கொண்ட IPS டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4,000 எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரியை கொண்டதாகவும், 24 மணிநேர பயன்பாடு கொண்டதாகவும் உள்ளது.

விரைவில் இந்தியாவில் களம் இறங்கவுள்ள ஐடெல் விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை முன்புறத்தில் 5 எம்.பி கேமரா, கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இயங்குதளத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு கேஸ், மோனோ ப்ளூடூத் ஹெட்செட் இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாஸ்டர் எடிஷன்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 27 இல் Mi A3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை!!

TechNews Tamil

களமிறங்க உள்ள இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ!

TechNews Tamil