ஐடெல் பிராண்டின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் தற்போது சிங்கப்பூரில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த இயர்பட்ஸ் டச் கண்ட்ரோல் வசதி கொண்டதாக உள்ளது. அதாவது ஐடெல் நிறுவனம் தற்போது முதல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இயர்போன் பெரிய சவுண்ட் டிரைவர்கள் கொண்டதாகவும், மேலும் இரண்டு இயர்பட்களிலும் சென்சார்கள் கொண்டதாகவும், மிகவும் சிறந்த ஆடியோ அனுபவம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் ஐடெல் ஐடிடபிள்யூ 60 இயர்போன் இணைப்பு ஆதரவாக யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி மற்றும் ப்ளூடூத் 5வசதி கொண்டுள்ளது. மேலும் 13எம்எம் சவுண்ட் டிரைவர்களும் உள்ளது. இந்த இயர் போன் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை கொண்டதாகவும் உள்ளது.
ஐடெல் ஐடிடபிள்யூ 60 360 டிகிரி ஆடியோ அனுபவம் கொண்டதாகவும், மேலும் இதன் இயர்பட்களில் மேம்பட்ட சென்சார்கள்ுவழங்கப்பட்டுள்ளன. சத்தத்தினை அதிகப்படுத்துதல்/ குறைத்தல் என்பது போன்ற அம்சங்களும் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் இதில் 35 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2.5 மணி நேர மியூசிக் பிளேடைம் மற்றும் 3 மணி நேர டாக்டைம் கொண்டதாக உள்ளது. இது 500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.