ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு பிரச்சினையாக இருப்பது ’ஹேங்’ ஆவதுதான்.
ஹேங் மொபைல்களை சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1.தேவையில்லாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்யவும்.
2.எந்த ஆப்ஸ்களையும் அன் இன்ஸ்டால் செய்யும் செட்டிங்கில் டேட்டாவை
க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்யவும்.

3.மொபைல் போன்-க்கு வரும் எஸ்.எம்.எஸ்கள் மற்றும் மெயில்களைப் படித்துவிட்டு தேவையில்லை என்றால் உடனடியாக டெலீட் செய்யுங்கள்.
4.போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில்
இருக்கும் அப்ளிகேஷன்களை Force stop கொடுக்கவும்.
5.ஆண்டிராய்டு அசிஸ்டன்ட், க்ளீன் மாஸ்டர் போன்ற அப்ளிகேஷன்களைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து Cache, thumbnails போன்றவற்றை க்ளீன் செய்யவும்.
6.மொபைலில் முடிந்தவரை தேவையான காண்டாக்ட்களை மட்டும் வைத்துக் கொண்டு மீது உள்ளவற்றை டெலீட் செய்து விடுங்கள்.
7. மொபைலில் வைரஸ் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புகள் அதிகம். மொபைலில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் ஆப்ஸ்கள் சரியாக ஸ்கேன் செய்வதில்லை. இதற்கு மாற்றாக ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி மாதமொரு முறை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.
8. ப்ளே ஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ்களை மட்டுமே இன்ஸ்டால் செய்யவும்.