iQOO 3 ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.2000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
1. 4ஜி வசதி கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் மாடலின் முந்தைய விலை -ரூ.36,990
2. 4ஜி வசதி கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் மாடலின் புதிய விலை -ரூ.34,990
இந்த iQOO 3 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வந்த ஸ்மார்ட்போன் ஆகும்.
iQOO 3 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மேலும் இது 7nm சிப்செட் ஆதரவினைக் கொண்டதாகவும், டெஸ்க்டாப்-நிலை கேமிங், சிக்கலான யுஐ மற்றும் மல்டி-ஜிகாபிட் 5 ஜி இணைப்பை கொண்டும் உள்ளது.

இது iQOO 3 ஐ உயர்நிலை கிளவுட்-அடிப்படையிலான கேமிங், போன்றவற்றினைக் கொண்டதாகவும் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதி கொண்டதாகவும் உள்ளது.
இந்த iQOO 3 ஸ்மார்ட்போன் வேகமான சிபியு வசதி LPDDR5 ரேம் மற்றும் UFS 3.1 பிளாஷ் சேமிப்பு போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.
இது எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஃபிளாஷ் சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. QOO 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் போலார் வியூ டிஸ்பிளேவினை கொண்டுள்ளது.
இது E3 சூப்பர் அமோலேட் பேனல் கொண்டதாகவும், 1200nits வரை அதிகபட்ச பிரகாச நிலைகளைக் கொண்டும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 13எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
IQOO 3 ஸ்மார்ட்போன் 4440எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது,