மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஐக்யூ நிறுவனம் iQOO 7 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த iQOO 7 5G ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
iQOO 7 5G ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாகவும், முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி கொண்டதாகவும், மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரை மூன்று கேமராக்கள் இருக்கும் என்பதைத் தவிர பிற தகவல்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கும் என்று தெரிகின்றது.