Mobile

ரூ. 36,990 என்ற விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்!!

ஐகூ பிராண்டின் ஐகூ 3 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 சூப்பர் AMOLED  2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

1.      ஐகூ 3 4ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 36,990

2.      ஐகூ 3 4ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 39,990

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டதாக உள்ளது, மேலும் இது அட்ரினோ 650 GPU வசதி கொண்டுள்ளது.

ரூ. 36,990 என்ற விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை ஐகூ 3 ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 16 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ரூ. 9999 க்கு அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான Tecno Camon 12 Air!

TechNews Tamil

முக்கிய அம்சங்களுடன் Oppo K3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஹெச்டிசி நிறுவனத்தின் HTC டிசையர் 21 ப்ரோ அறிமுகம்!

TechNews Tamil