Mobile

சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஐக்யூ நிறுவனம் தற்போது ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate ஆதரவினைக் கொண்டுள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியீடு!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது UI 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குவதாக உள்ளது. இந்த ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி Samsung ISOCELL GW3 சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் 4400எம்ஏஎச் பேட்டரி மற்றும் 55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மீண்டும் விற்பனையைத் துவக்கிய Redmi Note 8 Pro!

TechNews Tamil