Mobile

ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும் ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!!

ஐகூ பிராண்டு தற்போது இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ஜூலை 9 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இசட்1 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் 2408×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் 6.57 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீனைக் கொண்டுள்ளது.

ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது  குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும் ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 620 GPU கொண்டு இயங்குவதாக உள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும்  8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0 இயங்குதளம் கொண்ட் இயங்குவதாக உள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமராவினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும்  5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட Realme X2 இன் அசரவைக்கும் அம்சங்கள்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

நைஜீரியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil