முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ. வெளியாகி வருடங்கள் உருண்டோடியநிலையில், இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

தற்போது ஐபோன் எஸ்.இ. 2 குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த மாடலில் ஃபேஸ் ஐ.டி., கேமராக்கள், புதிய ஐ.ஒ.எஸ். போன்றவைகள் உள்ளது.
வடிவமைப்பினைப் பொறுத்தவரை ஐபோன் 8 ஐ அப்படியே ஒத்ததாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடல் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, டச் ஐ.டிய சென்சார் போன்றவையும் உள்ளது.
இதில் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் உள்ளது, ஆப்பிளின் அதிவேகமான ஏ13 பயோனிக் சிபர்செட் இதில் உள்ளது. இதே பிராசஸர் ஐபோன் 11 மாடல்களிலும் உள்ளது. ஐபோன் எஸ்.இ. மாடலில் ஏ9 சிப்செட் உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மேலும் ஐபேட் ப்ரோ மற்றும் நாய்ஸ் கேன்சலிங் வசதியுடன் ஏர்பாட்ஸ் 3 ஹெட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது.