சியோமி நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சியோமி ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆனது பலவகையான அசத்தலான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக உள்ளது.
புதிய சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் வகையின் விலை – ரூ. 1,399
இந்த சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆனது சியோமி வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆனது 5வாட் அவுட்புட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்பீக்கர் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும் கனடா ஃபைபர் ஃபிலிம் வசதியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்பீக்கரானது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியையும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்பீக்கர் கால்/ அழைப்புகளை ஏற்க மற்றும் நிராகரிக்க ஒற்றை பட்டன் வசதியினைக் கொண்டுள்ளது.
சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
இந்த ஸ்பீக்கரானது ஆக்ஸ் போர்ட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.