பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது மிகச் சிறப்பான ஆஃபர்களை அறிவித்து, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
புதிய ப்ரீபெய்ட் ப்ளான் ஒன்றை வெளியிட்டுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம், இது ரசிகர்கள் பலரையும் குஷிப்படுத்தியுள்ளது.
அதாவது 200 ரூபாய்க்கு கீழ் வழங்க வேண்டும் என்ற நோக்கில், ரூ.187க்கு ரீசார்ஜ் ப்ளானை வழங்கியுள்ளது.

அதாவது, இந்தப் பிளானில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.2ஜிபி டேட்டா கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் இலவசம். இதன் வேலிடிட்டி 28 நாள் ஆகும்.
3ஜி வேகத்தில் மட்டுமே செயல்படும் பி.எஸ்.என்.எல் ஆனது, மற்ற நெட்வொர்க்குகளைவிட அசத்தலான ஆஃபர்களை வெளிவிடுகிறது பி.எஸ்.என்.எல்.
மற்றொரு ப்ளானாக ரூ. 198க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.
இதிலும் 100 மெசேஜ்கள் இலவசமாகும். இதற்கு போட்டியாக, ரூ. 229க்கு வோடபோன் நிறுவனம் ஒரு ப்ளானையும், ரூ. 249க்கு ஏர்டெல் நிறுவனம் ஒரு ப்ளானையும் அறிவித்துள்ளது.
இப்படி ஒரு மலிவான ப்ளானுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.