சவுண்ட் ஒன் நிறுவனம் புதிய வகையில் மிகவும் சிறப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த வயர்லெஸ் ஹெட்போன் வி11 என்னும் ஹெட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். அதாவது இந்த ஹெட்போன் ஆனது முந்தைய வி10 மாடலின் மேம்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஹெட்போன் பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையிலான அம்சத்தினைக் கொண்டுள்ளது. தற்போது சவுண்ட் ஒன் வி11 வயர்லெஸ் ஹெட்போன் குறித்த அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சவுண்ட் ஒன் வி11 வயர்லெஸ் ஹெட்போன் ஆனது 40 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிறப்பான ஆடியோ அனுபவம் கொண்டதாகவும் மற்றும் டீப் பாஸ் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இது மடிக்கக்கூடிய வடிவமைப்பு, ஹெட்பேண்ட் மற்றும் இயர்கப்களினைக் கொண்டுள்ளது, மேலும் காதுகளுக்கு இதமளிக்கும் வகையில் சிறப்பான குஷன்கள் கொண்டுள்ளது.
மேலும் கனெக்டிவிட்டினைக் கணக்கில் கொண்டால் ப்ளூடூத் 5.0 கொண்டு இணைக்கப்படுவதாக உள்ளது. மேலும் பேட்டரி தீர்ந்து போகும்பட்சத்தில், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டதாகவும் உள்ளது.
பேட்டரி அளவினைப் பொருத்தவரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.