Mobile

அறிமுகமாகவுள்ள வயர்லஸ் சார்ஜர்!

இப்போது வரும் புதிய ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியோடு அறிமுகம் செய்யப்படுகிறது. சிறிய தட்டு போன்ற கருவி வயர் மூலம் பிளக்கில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த தட்டின் மேல் போனை வைத்தால் போதும். காந்தப்புலம் மூலமாக சார்ஜ் ஏறிவிடும். காந்தப்புலம் என்பது Electromagnetic Induction ஆகும். 



இது ஒரு பக்கம் இருக்க, இதே போல், போனில் இருக்கும் சார்ஜை மற்றொரு போனிற்கு மாற்றும் தொழில்நுட்பமும் உள்ளது. இதற்கு ‘ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜ் (Reverse Wireless Charge)’ என்று பெயர். முதன் முதலாக ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட்டது. பின்னர், சாம்சங் S10+ போனில் வந்தது. 

அறிமுகமாகவுள்ள வயர்லஸ் சார்ஜர்!

போனின் பின்புறத்தில் மற்றொரு போனை வைத்தால் போதும். போனில் இருக்கும் சார்ஜை அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இரு போன்களிலும் ரிவர்ஸ் சார்ஜ் வசதி இருக்க வேண்டும். 

அந்த வகையில், தற்போது சியோமியின் அடுத்து வரவுள்ள ஸ்மார்ட்போனில், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டு வரப்பட உள்ளது. இது தொடர்பாக MIUI beta வலைப்பக்கத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே, ஹூவாய், சாம்சங்கிற்கு அடுத்தபடியாக ரெட்மி போனில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜ் வசதி கொண்டு வரப்படுகிறது. 

மேலும் 90 நொடிகள் வரையில் போன் எதுவும் சார்ஜ் செய்யப்படவில்லை என்றால், முதல் போனில் சார்ஜ் சப்ளை ஆட்டோமெட்டிக்காக நின்றுவிடும். சார்ஜ் செலவை மிச்சப்படுத்தும் வகையில் இந்த நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. 

Related posts

Vivo V17 ஸ்மார்ட்போனுக்கு இலவசமாக Vivo Y11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலேசியாவில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 12,999 விலையில் அறிமுகமானது ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil