வு நிறுவனம் வு ஸ்மார்ட் டிவியினை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த வு டிவியானது 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என்ற மூன்று வகைகளில் அறிமுகம் செய்துள்ளது.

1. 43 இன்ச் வு பிரீமியம் 4 கே டிவி ஸ்மார்ட் டிவியின் விலை- ரூ.24,999
2. 50 இன்ச் வு பிரீமியம் 4 கே டிவி ஸ்மார்ட் டிவியின் விலை- ரூ.27,999
3. 55 இன்ச் வு பிரீமியம் 4 கே டிவி ஸ்மார்ட் டிவியின் விலை- ரூ.31,999
இந்த வு டெலிவிஷன்ஸ் ஆனது பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வு 4கே ஸ்மார்ட் டிவியானது எல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியானது 3840×2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இந்த வு ஸ்மார்ட் டிவியானது டால்ப விஷன் தரநிலை உட்பட எச்.டி.ஆரை ஆதரிக்கக் கூடியதாக உள்ளது, மேலும் இது 400nits என்ற பிரைட்நஸ் மதிப்பீட்டைக் கொண்டுள்ளதாக உள்ளது.
இந்த டிவியானது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த வு பிரீமியம் ஸ்மார்ட் டிவியானது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.