Mobile

அறிமுகமானது விவோ நிறுவனத்தின் Vivo Y1s ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் தற்போது Vivo Y1s விவோ நிறுவனம் புதிதாக Vivo Y1s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விவோ ஒய் 1 எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆனது அரோரா ப்ளூ மற்றும் ஆலிவ் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது. விவோ Y1s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அறிமுகமானது விவோ நிறுவனத்தின் Vivo Y1s ஸ்மார்ட்போன்!!

விவோ Y1s ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரியுடன் மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட் கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது,

விவோ Y1s ஸ்மார்ட்போன், 4030 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட தனிப்பயன் ஃபன்டூச்சோஸ் 10.5 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4 ஜி வோல்டிஇ சிம் ஆதரவு, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் Galaxy A30s அசத்தலான சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil

விற்பனையைத் துவக்கிய விவோ வை19 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சியோமி மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil