Mobile

அறிமுகமானது விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல்!

விவே நிறுவனம் தனது விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடலை கம்போடியாவில் அறிமுகம் செய்துள்ளது.

விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் 6.53 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாய் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி போர்ட்ரெயிட் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் போன்ற கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல்!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

விவோ Y50 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

மத்திய கிழக்கில் அறிமுகமானது மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ்!!

TechNews Tamil

அதிரடியாக இன்று அறிமுகமான Vivo V17 Pro!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமான Vivo Y11!

TechNews Tamil