Mobile

அசத்தலான அம்சங்களுடன் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

விவோ நிறுவனம் புதிய விவோ Y19 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

  1. விவோ Y19 விலை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.13,990

இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

 மேலும் இது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு 9.0 உடன் ஃபன்டச் ஒஎஸ் 9.2 இயங்குதளம் கொண்டு செயல்படக் கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 16எம்பி பிரைமரி சென்சார். 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் உள்ளன.

மேலும் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

இந்த விவோ Y19 ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

மேலும் இது வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 2.0, போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

மலிவு விலையில் அறிமுகமான எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்17 ப்ரோ எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil