Mobile

அறிமுகமானது அசத்தல் அம்சங்களுடன் விவோ Y11 ஸ்மார்ட்போன்!

 விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y11 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,

இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்தநிலையில், அமேசானில் நாளை முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  1.  விவோ Y11 ஸ்மார்ட்போன் மாடல் விலை- ரூ.8,990

இந்த ஸ்மார்ட்போன் 6.35 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1544 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் அட்ரினோ 505ஜிபியு வசதி கொண்டதாக உள்ளது.


அறிமுகமானது அசத்தல் அம்சங்களுடன் விவோ Y11 ஸ்மார்ட்போன்!

இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி செகன்டரி லென்ஸ் என இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது.

 முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மெமரி வகையினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

விவோ Y11 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

பிளிப்கார்ட்: ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

TechNews Tamil

1000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்ட ரியல்மி XT ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியானது 8GB ரேம் கொண்ட விவோ U20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil