விவோ நிறுவனத்தின் விவோ வி17 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது கிடைத்துள்ளது.
விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2400 x 1080 பிக்சல்கல் தீர்மானம் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 612 ஜி.பீ.யூ வசதி கொண்டு உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் இது ஃபன்டூச் ஓஎஸ் 9.2 ஆதரவு கொண்டதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த விவோ வி17 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.
விவோ வி17 ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல்-பேண்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.