Mobile

அசத்தலான அம்சங்களுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வகையின் விலை – ரூ.27,650
  2. விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வகையின் விலை –  ரூ.30,650

இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மையானது. மேலும் இது 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 712 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/ 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.  

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி சென்சார், 5எம்பி சென்சார், 2எம்பி சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 32எம்பி செல்பீ கேமராவை முன்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது 4010 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இது வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ், போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

மலிவு விலையில் வரவுள்ள Huawei Enjoy 10S!

TechNews Tamil

விற்பனையைத் துவக்கிய விவோ வை19 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமானது ரியல்மி வி 5 5 ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil