Mobile

அறிமுகமானது அசத்தலான அம்சங்களுடன் Vivo iQoo Neo 855!

Vivo நிறுவனம் தற்போது புதிய iQoo Neo 855 வகையினை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் நவம்பர் 1 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

  1.  Vivo iQoo Neo 855 இன் 6GB + 64GB வகையின் விலை – ரூ. 20,000
  2.  Vivo iQoo Neo 855 இன் 6GB + 128GB வகையின் விலை – சுமார் ரூ. 23,000
  3.  Vivo iQoo Neo 855 இன் 8GB + 128GB வகையின் விலை – சுமார் ரூ. 25,000
  4.  Vivo iQoo Neo 855 இன் 8GB + 256GB வகையின் விலை – ரூ. 27,000

இந்த ஸ்மார்ட்போன் Funtouch OS 9 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

அறிமுகமானது அசத்தலான அம்சங்களுடன் Vivo iQoo Neo 855!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.38 இஞ்ச் full-HD டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானத்துடன் Super AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இது fingerprint sensor  உடன் 8GB of RAM மற்றும் Adreno 640 GPU போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2.84GHz octa-core Qualcomm Snapdragon 855 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி கொண்டதாக உள்ளது, USB Type-C மற்றும் 3.5mm audio jack போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது Wi-Fi 802.11ac, Bluetooth, GPS மற்றும் 4G VoLTE போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது. 

Related posts

சீனாவில் களம் இறங்கவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலேசியாவில் வெளியாகியுள்ள ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள Realme 6i ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil