Mobile

பிலிப்பைன்ஸில் அறிமுகமானது விவோ 19 நியோ ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் தற்போது விவோ 19 நியோ ஸ்மார்ட்போனை பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ 19 நியோ ஸ்மார்ட்போன் 44 அங்குல முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினையும், 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட திரை தெளிவுத்திறன் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது AMOLED வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

மேலும் இது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC செயலி கொண்டு இயங்குவதாக உள்ளது.  மேலும் ஃபண்டூச் ஓஎஸ் 10 ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 10 ஐ ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.  மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் அறிமுகமானது விவோ 19 நியோ ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த விவோ வி 19 நியோ ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டதாகவும், மேலும் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் சென்சார், இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல் சென்சார் வைட்-ஆங்கிள் லென்ஸ், மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார், நான்காவது கேமரா 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்டதாகவும் உள்ளது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, 4 ஜி எல்டிஇ, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அம்சம் கொண்டதாக உள்ளது.

Related posts

Redmi Note 8 Pro அக்டோபர் 16 ஆம் தேதி வெளியீடு!

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கியுள்ள Samsung Galaxy M31!

TechNews Tamil

ரூ.500 விலை அதிகரிப்புடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 8!!

TechNews Tamil