Gadgets

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமானது Vu நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள்!

பிரபலமான Vu நிறுவனம் சீனாவில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது.

வு நிறுவனத்தின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி 1366×768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் எச்டி எல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் Chromecast மற்றும் ஆப்பிள் ஏர்ப்ளேக்கான ஆதரவினையும், ஏபிளஸ் கிரேடு ஐபிஎஸ் பேனல் ஆதரவினையும் கொண்டுள்ளது.

புதிய Vu ஸ்மார்ட் டிவி ஆனது கிரிக்கெட் மோட், பிசி, கேம் மோட், MPEG Noise reduction ஆதரவினைக் கொண்டுள்ளது. மேலும் அடாப்டிவ் லூமா கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது.

ஆடியோவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட் டிவியானது 40W இன்-பில்ட் சவுண்ட்பார் ஸ்டைல் ஸ்பீக்கர் சிஸ்டத்திற்கான டால்பி ஆடியோ ட்யூனிங் அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது இரண்டு ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ செயலாக்கம் கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டும் உள்ளது.

பிளே ஸ்டோர், கூகிள் கேம்ஸ், கூகிள் மூவிஸ் போன்ற பயன்பாடுகளைக் கொண்டும், மேலும் ஆப்பிள் ஏர்ப்ளே மற்றும் கூகிள் குரோம் காஸ்ட்டையும் ஆதரிப்பதாகவும் உள்ளது.

இந்த டிவிக்கள் 64பிட் ஆக்டோ-கோர் செயலியை கொண்டதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆர்சிஏ, ஆர்எப், ஹெட்போன், லேன், வைஃபை, புளூடூத் 5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

தாம்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

அறிமுகமான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் & எக்ஸ்ட்ரீம் ஸ்டிக்!!

TechNews Tamil

ரூ.21,400 மதிப்பிலான ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த சியோமி!!

TechNews Tamil