ஹானர் நிறுவனம் விஷன் சீரிஸ் வகையிலான ஸ்மார்ட் டிவிகளான ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் டிவி ப்ரோ ஆகிய 2 டிவிக்களை நேற்று புது தில்லியில் நடந்த ஒரு வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்தது.
இந்த டிவியில் உள்ள மிகச் சிறந்த அம்சமாக அனைவரும் பார்ப்பது, இதில் உள்ள பாப் அப் செல்பீ கேமரா அமைப்பைத் தான்.
- Honor Vision TV
- Honor Vision TV Pro

இரண்டு
ஸ்மார்ட் டிவிக்களுமே 55 இன்ச் அளவிலான 4 கே டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேக்கள் எம்இஎம்சி ஐ கொண்டுள்ளது.
இந்த டிவிக்கள்
மாலி-ஜி 51 எம்.பி 4 ஜி.பி உடனான ஹோங்கு 818 க்வாட் கோர் சிப்செட் மூலம்
இயங்குகிறது. இந்த இரண்டு
டிவிக்களும் ஹார்மனிஓஎஸ் 1.0 மூலம் இயங்குகிறது.
இது நான்கு 10W ஸ்பீக்கர்கள் கொண்டதாக உள்ளது, இந்த இரண்டு ஸ்மார்ட்
டிவிக்களுமே வீடியோ காலுக்காக ஆறு மைக்ரோபோன்களைக் கொண்டுள்ளது.
இன்புட்/அவுட்புட் போர்ட்களில், மூன்று எச்.டி.எம்.ஐ 2.0 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி 3.0, ஏ.வி ஜாக், S/PDIF மற்றும் ஈதர்நெட் போர்ட்
ஆகியவைகள் உள்ளன.