Gadgets

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்ற வகையில் தாம்சன் Oath Pro series ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம்!!

பிரெஞ்சு தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனமான தாம்சன் நிறுவனம் இன்று மூன்று ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தாம்சன் Oath Pro series என்ற பெயரில் 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவிக்கள் 3840×2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் 4கே ஆதரவு மற்றும் எச்டிஆர் 10 போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி எம்.இ.எம்.சி, டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10, புளூடூத் 5.0, நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் ப்ளே ஸ்டோர் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்ற வகையில் தாம்சன் Oath Pro series ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம்!!

இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் அசிஸ்டென்ட் வசதி கொண்டதாகவும் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற ஸ்ட்ரீமிங் அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இது ஆன்லைன் வகுப்புகளுக்குப் பயன்படுத்தும் வகையிலான அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது கேமிங் அனுபவத்திற்கான எச்டிஆர் 10 ஆதரவுக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை, புளூடூத் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது டி.சி.எல். சி8 சீரிஸ் 4K ஸ்மார்ட் டி.வி!

TechNews Tamil

ஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு!

TechNews Tamil

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன்!!

TechNews Tamil